அமர்க்களமாக ஆரம்பித்த மும்பை...ஜடேஜா பந்து வீச்சில் சுருண்டது...மும்பை வெற்றிக்கு வாய்ப்பு உள்ளதா? | IPL 2023 MI vs CSK Live Score

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 12 வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரை சென்னை அணியின் பத்து வீச்சாளர் டெப்பக் சாஹர் டத்தொடங்கி வைத்தார். இவரின் பந்து வீச்சை விளாசி அடித்த மும்பை அணி முதல் ஓவர் முடிவில் இரண்டு பவுண்டரி அடித்து 10 ரன்களை எடுத்தது.
என்ன தான் ஓப்பனிங் மாஸ்சாக ஆரம்பித்தாலும் சென்னை அணியின் பௌலிங்கால் திணற ஆரம்பித்தது மும்பை. முதல் விக்கெட்டே மும்பை அணியின் கேப்டன் ரோஹித் 21(13) தான். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கினர். இப்படியாக 9 ஓவர் முடிவில் மும்பை அணி 76/4 என்ற கணக்கில் இருந்தது.
சரி அடுத்து வரும் வீரர்களாவது ரன்களை எடுத்து மும்பை அணியை வெற்றி பாதையை நோக்கி கொண்டு செல்வார்கள் என்று அனைவரும் ஆவலாக இருந்தனர். இருப்பினும் ஜடேஜாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மும்பை அணி வீரர்கள் கதி கலங்கி நின்றனர். இப்படியாக 15 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அவற்றுள் ஜடேஜா 3, மிட்செல் சான்ட்னர் 2 மற்றும் துஷார் தேஷ்பாண்டே 1 விக்கெட்டுகளை எடுத்து சென்னை அணியை வெற்றி பெற செய்ய பெரும் பங்கு வகித்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய டேவிட் சிக்ஸர், பௌண்டரி என்று அடித்து வெலாச ஆரம்பித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து மும்பை அணி நிறைவு பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 158 ரன்கள் என்ற இலக்கில் அடுத்து களமிறக்க உள்ளது.