அர்ஷ்தீப்பின் பந்து வீச்சில் இரண்டாக உடைந்த ஸ்டம்ப்...பிசிசிஐக்கு 20 லட்சம் இழப்பு!

நேற்று மும்பைக்கு எதிரான பஞ்சாப் அணி மோதியதில், அர்ஷ்தீப்பின் வெறித்தனமான பௌலிங்கால் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றது. ஆனால் இதனால் பிசிசிஐக்கு கிட்டத்தட்ட ரூ 20 லட்சம் இழப்பு ஏற்பட்டதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் இருவரும் மோதிக்கொண்டனர். இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 215 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்தது மும்பை இண்டியன்ஸ் அணி. போட்டி முடியும் வரையில் யார் வெற்றிப் பெற போகிறார்கள் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தது.
இருப்பினும் இறுதி ஓவரில் மும்பை அணியின் ஆட்டத்தை அடக்க அர்ஷ்தீப் சிங் மிகவும் ஆக்ரோஷமாக பந்து வீசியதில் ஸ்டம்ப் இரண்டாக உடைந்து விட்டது. பின்னர் மற்றொரு ஸ்டம்ப்பை கொண்டு வந்து ஆட்டத்தை தொடங்க சிறிது நேரம் தாமதமாகி விட்டது. ஆனால் இரண்டாவதாகக் கொண்டு வந்த புதிய ஸ்டம்ப்பையும் அர்ஷ்தீப் சிங் தந்து பந்து வீச்சால் சுக்குநூறாக்கினார். இதனால் பிசிசிஐக்கு கிட்டத்தட்ட ரூ 20 லட்சம் இழப்பு ஏற்பட்டதாம். அறிக்கைகளின்படி, எல்இடி ஸ்டம்புகள் மற்றும் ஜிங் பெயில்களின் விலை சுமார் $40,000, அதாவது இந்திய விலை படி ரூ.30 லட்சம்.