டாஸ் வென்ற csk...பௌலிங் தேர்வு...பிளேயிங் லெவன் அப்டேட்! | IPL 2023 MI vs CSK Toss

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 12 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் எம். எஸ்.தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 தொடரில் மொத்தம் இரண்டு போட்டிகள் விளையாடியுள்ளன. அதில் குஜராத் டைட்டன்ஸ் உடன் விளையாடிய முதல் போட்டியில் கடைசி வரை தாக்கு பிடித்து தோல்வியை சந்தித்தனர். அடுத்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் நடைபெற்றது. அதில் அட்டகாசமாக விளையாடி முதல் வெற்றியை பதித்தது CSK.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரையில் ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மட்டுமே போட்டியிட்டுள்ளது. அதிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மும்பை vs சென்னை அணி எதிரெதிரே மோதிக்கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்று மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் தோனி அவர்கள் பௌலிங்கை தேர்வு செய்துள்ளார். எனவே, முதலில் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமிரான் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், அர்ஷத் கான், கிருதிக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பியூஷ் சாவல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, எம்எஸ் தோனி (கேப்டன்), சிவம் துபே, ட்வைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், டெப்பக் சாஹர், சிசண்டா மகாலா, துஷார் தேஷ்பாண்டே.