லக்னோ vs ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியின் டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் அப்டேட்.!! | ipl 2023 lsg vs srh toss

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 10 வது லீக் போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஐடன் மார்க்ராம் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளார்கள். இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியானது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் 2023 தொடரில் விளையாடிய போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது, மேலும் தற்போது அணியில் முன்னணி வீரர் குயின்டன் டி காக் இணைந்துள்ளதால் கட்டாயம் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடரில் விளையாடிய ஒரு போட்டியில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ஹைதராபாத் அணி விளையாடிய முதல் போட்டியில் கேப்டன் ஐடன் மார்க்ராம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.
தற்போது லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ள நிலையில் கட்டாயம் முதல் வெற்றியை ஹைதராபாத் அணி பதிவு செய்யும் என்று தெரிய வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐடன் மார்க்ராம் பேட்டிங்கை தேர்வு செய்தார், எனவே கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலிங் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் : கேஎல் ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(வி.கீ ), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன் : மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங்(வி.கீ), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்.