லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கலக்கல் வெற்றி..!! ஹைதராபாத் சொதப்பல் ஆட்டம்..!! | ipl 2023 lsg vs srh highlights
![லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி கலக்கல் வெற்றி..!! ஹைதராபாத் சொதப்பல் ஆட்டம்..!! | ipl 2023 lsg vs srh highlights](https://www.sportspartans.com/assets/uploads/news-2045.jpg)
ஐபிஎல் அரங்கில் இன்று நடைபெற்ற போட்டியில் கே எல் ராகுல் தலைமையில் ஆன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐடன் மார்க்ராம் தலைமையில் ஆன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிதறடித்து வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை தலைமை தாங்கிய புதிய கேப்டன் மார்க்ராம் சரியான முறையில் அணியை வழிநடத்த வில்லை என்பது தெளிவாக தெரிந்தது , குறிப்பாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணி முன்னணி வீரர்கள் உடனுக்குடன் லக்னோ பவுலிங்கில் ஆட்டமிழந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 121 ரன்கள் பதிவு செய்தது.
அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கட்டுப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் 35(31) பொறுப்புடன் விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஹைதெராபாத் அணி பவுலர்கள் ஒரு அளவுக்கு சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினாலும் மிகவும் குறைவான ரன்களை இலக்காக பதிவு செய்திருந்ததால் எளிதாக லக்னோ அணி வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது, லக்னோ அணிக்கு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை பெற்றது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 34(23) ரன்கள் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங்கில் முயன்று லக்னோ அணி முன்னணி வீரர்கள் விக்கெட்டை கைப்பற்றினாலும், லக்னோ அணி ஹைதராபாத் அளித்த இலக்கை 16 ஓவர்களில் பெற்று எளிதாக அடைந்து வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.