லக்னோ அணியின் மிரட்டல் பவுலிங்கில் ஹைதராபாத் சறுக்கல்..!! | ipl 2023 lsg vs srh

இந்திய மண்ணில் நடைபெறும் ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 10 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மிரட்டல் பவுலிங்கை வெளிப்படுத்தி துவம்சம் செய்தது என்று கூறினால் மிகையில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடென் மார்க்ரம் பேட்டிங் தேர்வு செய்தார், ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் டாஸ் வென்று பேட்டிங்கை முதல் முறையாக தேர்வு செய்த அணி ஹைதராபாத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னணி வீரர்கள் வேகமாக உடனுக்குடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்கள், குறிப்பாக சிறப்பாக பவுலிங் செய்ய லக்னோ அணி ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா மயங்க அகர்வால் 8(7), ஐடென் மார்க்கரம் 0(1) மற்றும் அன்மோல்பிரீத் சிங் 31(26) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 35(41) ரன்கள் பதிவு செய்தார், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மிகவும் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் பதிவு செய்தது. அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் மிகவும் அதிரடி பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள அணியாக ஹைதராபாத் அணி உள்ளதால், இந்த இலக்கை லக்னோ அணி எட்ட முடியாத வகையில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.