கொல்கத்தா அணியின் சுழலில் சுருண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்..!! அசத்தல் வெற்றி..!! | ipl 2023 kkr vs rcb highlights

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 9 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி பெங்களூர் அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டை கைப்பற்றி ஐபிஎல் அரங்கை அதிர வைத்தார்கள், குறிப்பாக கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் பவுலிங்கில் மிரட்டல் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சுருண்டது என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பவுலர்களை திணறடித்து ரன்கள் குவித்தார்கள்.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்களை பெங்களூரு அணிக்கு இலக்காக அளித்தது, அதன்பின் கொல்கத்தா அணி அளித்த இமாலய இலக்கை அடைய களமிறங்கிய பெங்களூரு அணி முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் டூ பிளேஸிஸ் சிறந்த தொடக்கத்தை அளித்த நிலையில், போட்டியின் நிலையை மாற்றும் வகையில் கொல்கத்தா அணி ஸ்பின்னர்கள் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார்கள்.
அதாவது கொல்கத்தா அணி முன்னணி பவுலர்கள் சுனில் நரைன் பெங்களூரு அணி வீரர்கள் விராட் கோலி 21(18) , ஷாபாஸ் அஹ்மத் 1(5) விக்கெட்களையும் மற்றொரு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி பெங்களூரு கேப்டன் டூ பிளேஸிஸ் 23(12), கிளென் மாக்ஸ்வெல் 5(7) மற்றும் ஹர்ஷல் பட்டேல் 0(2) உள்ளிட்டோர் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.
அதன்பின் களத்தில் சற்று அதிரடி காட்டிய பெங்களூரு அணி ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் 19(18) ரன்களில் கொல்கத்தா பவுலர் ஷர்டுல் தாகூர் இடம் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் 9 (8) இளம் கொல்கத்தா அணி பவுலர் சுயாஷ் சர்மா இடம் ஆட்டமிழந்த நிலையில் கொல்கத்தா அணியின் வெற்றி உறுதியானது.
கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பதிலடி கொடுப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் அளிக்கும் விதமாக பெங்களூரு 13 ஓவர்கள் முடிந்த பொது 86 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்காக புதிதாக களமிறங்கிய இளம் பவுலர் சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளை அசத்தினார்.
அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு முடிவு கட்டும் வகையில் மிரட்டல் பவுலிங்கை வெளிப்படுத்திய முன்னணி பவுலர் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 17.4 ஓவர்களில் கொல்கத்தா அணி ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.