ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள முன்னணி வீரர்கள் பட்டியல்.. !!

இந்தியாவின் முன்னணி தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அனைத்து அணிகளும் இந்த தொடருக்கான தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சில முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் பல அணிகள் தொடரின் ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகள் தங்கள் ஹாம் கிரௌண்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பு சில முன்னணி அணிகளில் இருந்து அதிரடி வீரர்கள் காயத்தினால் தொடரில் இருந்து விலகி உள்ளனர், அதே சமயத்தில் சில வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஐபிஎல் தொடரில் தங்கள் பங்களிப்பை இன்னும் உறுதிப்படுத்தாமல் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ல் இருந்து விலக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:
ஜஸ்பிரித் பும்ரா |
மும்பை இந்தியன்ஸ் |
ரிஷப் பந்த் |
டெல்லி கேபிட்டல்ஸ் |
கைல் ஜேமிசன் |
சென்னை சூப்பர் கிங்ஸ் |
வில் ஜாக்ஸ் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
ஜே ரிச்சர்ட்சன் |
மும்பை இந்தியன்ஸ் |
ஐபிஎல் 2023ல் இன்னும் தங்கள் பங்கேற்பு குறித்து உறுதிப்படுத்தப்படாத வீரர்களின் பட்டியல் :
அன்ரிச் நார்ட்ஜே |
டெல்லி கேபிட்டல்ஸ் |
ஸ்ரேயாஸ் ஐயர் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
ஜானி பேர்ஸ்டோ |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
சர்பராஸ் கான் |
டெல்லி கேபிட்டல்ஸ் |
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.