IPL 2023 : கோடிகளில் மிதக்கும் இளம் இங்கிலாந்து வீரர்..! முதல் ஏலத்திலேயே ஜாக்பாட்..!

IPL 2023 Mini Auction Live Updates : இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி புரூக் ஐ.பி.எல் ஏலத்தில் முதல் முறையாக பங்கேற்கும் நிலையில் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டார்.
ஹாரி புரூக் இந்த 2022-ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டி-20 போட்டியில் களமிறங்கினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடிய 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக விளையாடி அந்த தொடரின் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஹாரி புரூக் இந்த ஐ.பி.எல் தொடரில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தார்,அவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்பட்டது,அதேபோல் இந்த ஏலத்தில் ஆரம்பத்திலேயே மிகவும் அதிக விலைக்கு அணிகள் இவருக்கு போட்டி போட இறுதியாக 13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்டார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்ட ஹாரி புரூக் இங்கிலாந்து அணிக்காக இதுவரை டி-20 போட்டிகளில்
போட்டிகள் : 20
ரன்கள் : 372
அதிக ரன் : 81
ஸ்ட்ரைக் ரேட் :137.78
இந்த ஏலத்தில் கண்டிப்பாக ஹாரி புரூக் விற்கப்பட்ட விலை தான் அதிகமான விலையாக இருக்கும் என்ற நிலையில்,ஹைதராபாத் அணிக்காக அவரது பங்களிப்பை பொறுத்திருந்து ஐ.பி.எல் போட்டியில் காண்போம்.