ஐபிஎல் அரங்கில் தவான் மிரட்டல் ஆட்டம்…!! முக்கிய சாதனை..!! | ipl 2023 pbks dhawan record

ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினார், மேலும் ஐபிஎல் அரங்கில் புதிய சாதனை படைத்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினார்கள், குறிப்பாக கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மிரட்டல் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் அரைசதம் கடந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் உடன் 86*(56) ரன்கள் பதிவு செய்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் அரங்கில் முக்கிய சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ராஜஸ்தான் அணிக்கு எதிராக தவான் நேற்றைய ஆட்டத்தில் 35 பந்துகளில் 50 ரன்கள் பெற்ற போது, ஐபிஎல் அரங்கில் 50 வது அரை சதத்தை பதிவு செய்தார். மேலும் இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 3 வது வீரராக 50 அரைசதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை படைத்தார், இந்த சிறப்புமிகு பட்டியலில் 1வது இடத்தில் டேவிட் வார்னர் 60 அரைசதங்களுடனும், 2 வது இடத்தில் விராட் கோலி 50 அரைசதங்களுடனும் உள்ள நிலையில் தற்போது 3 வது வீரராக ஷிகர் தவான் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 ஆம் அரங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழி நடத்தி வரும் முன்னணி வீரர் ஷிகர் தவான், இதுவரை தொடரில் பங்கேற்ற 2 போட்டிகளில் அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் 2023 ஆம் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவை தவான் நிறைவேற்றுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.