விறுவிறுப்பான போட்டி...டெல்லியின் பந்து வீச்சில் சிக்கி...ஹைதெராபாத் படு தோல்வி! | IPL 2023 SRH vs DC Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 34 வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து. அதன் பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கும் ஹைதெராபாத் அணி 145 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்தது.
முதலில் களமிறங்கிய ஹாரி புரூக் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்கத்தில் இருந்தே தெளிவான ஆட்டத்தை மேற்கொண்டனர். இதனால் முதல் 5 ஓவர்கள் வரை எந்த சிரமும் இன்றி ஹைதெராபாத் அணி ரன் எடுக்க முடிந்தது. இருப்பினும் anrich nortje பந்து வீச்சில் ஹாரி புரூக் (7) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வாலுக்கு கை கொடுத்தார் ராகுல் திருப்பதி. இருப்பினும் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க இவர்கள் சற்று பொறுமையாக விளையாட ஆரம்பித்தனர். மயங்க மற்றும் ராகுல் இருவரின் பார்ட்னர்ஷிப்பால் ஹைதெராபாத் அணி டெல்லிக்கு மிகப்பெரிய சவாலை அளித்தது.
அதுவும் நீண்ட நேரத்திற்கு தாக்கு பிடிக்க முடிய வில்லை. அக்சர் படேலின் ஓவரில் மயங்க அகர்வால் (49) அவுட் ஆகிவிட்டார். இது ஹைதெராபாத் அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. 12 வது ஓவர் வரை ஹைதெராபாத் அணி 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இருப்பினும் தங்களால் முடிந்த வரை ரன் எடுக்க முயன்றனர் ராகுல் திருப்பதி மற்றும் அபிஷேக் சர்மா. அப்போது ஆரம்பித்தது டெல்லி அணியின் சாதுர்ய பந்து வீச்சு. அதனால் அடுத்தடுத்த ஓவர்களில் ராகுல் திருப்பதி (15), அபிஷேக் சர்மா (5) மற்றும் ஐடன் மார்க்ராம்(3) அவுட் ஆகினார்கள். இவர்களுக்கு பின்னர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கைகளில் தான் இருந்தது ஹைதெராபாத் அணியின் வெற்றி அல்லது தோல்வி.
இவர்களின் ஆட்டம் போட்டியின் நிலையை அப்படியே மாற்றி விட்டது. பௌண்டரிகளை அடித்து விளாசிய ஹென்ரிச் கிளாசென் (31) anrich nortje-வின் பந்து வீச்சால் ஆட்டமிழந்தார். 18 வது ஓவரில் 126 ரன்கள் என்ற நிலையில் இருந்தது ஹைதெராபாத். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி டெல்லி அணிக்கு சவாலாக திகழ்ந்தார். இறுதியாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் மார்கோ ஜான்சன் இருவரும் விளையாடினர். இறுதி ஓவரில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத வகையில் இருந்தது இன்றைய போட்டி. இருப்பினும் 1 பந்தில் 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி தோல்வயடைந்தது. டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.