ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் போட்டிகள் குறித்த விவரங்கள் அடங்கிய முழு அட்டவணை..!!

இந்தியாவின் முக்கிய டி20 தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரில் நடைபெறும் போட்டிகள் குறித்த முழு அட்டவணை வெளியானது. இந்த தொடரில் இளம் வீரர்கள் படையை கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் போட்டிகள் குறித்து முழு விவரத்தையும் காண்போம்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரிஷாப் பந்த் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி தொடரில் 5 வது இடத்தை பிடித்தது, இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பந்த் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், மேலும் டெல்லி அணிக்கு புதிய கேப்டனாக யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் புதிய கேப்டன் தலைமையில் டெல்லி அணி கடந்த முறை போல் சிறப்பாக செயல்படும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள், தற்போது வெளியாகி உள்ள டெல்லி அணியின் போட்டிகள் குறித்த விவரங்களை பார்ப்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு அட்டவணை :
எண் |
தேதி |
நேரம் |
நாள் |
போட்டி |
மைதானம் |
1 |
1.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
லக்னோ |
2 |
4.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS குஜராத் டைட்டன்ஸ் |
டெல்லி |
3 |
8.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
ராஜஸ்தான் ராயல்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
கவுகாத்தி |
4 |
11.4.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் |
டெல்லி |
5 |
15.4.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
பெங்களூர் |
6 |
20.4.23 |
7:30 PM |
வியாழக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
டெல்லி |
7 |
24.4.23 |
7:30 PM |
திங்கள் கிழமை |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
ஹைதராபாத் |
8 |
29.4.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
டெல்லி |
9 |
2.5.23 |
7:30 PM |
செவ்வாய் கிழமை |
குஜராத் டைட்டன்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
அகமதாபாத் |
10 |
6.5.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
|
டெல்லி |
11 |
10.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
சென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
சென்னை |
12 |
13.5.23 |
7:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் |
டெல்லி |
13 |
17.5.23 |
7:30 PM |
புதன்கிழமை |
பஞ்சாப் கிங்ஸ் VS டெல்லி கேப்பிடல்ஸ் |
தர்மசாலா |
14 |
20.5.23 |
3:30 PM |
சனிக்கிழமை |
டெல்லி கேப்பிடல்ஸ் VS சென்னை சூப்பர் கிங்ஸ் |
டெல்லி |
இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் தனது முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.