சென்னை சூப்பர் கிங்ஸ் மிரட்டல் ஆட்டம்..!! கைக்வாட் கலக்கல்..!! | ipl 2023 csk innings vs gujarat

ஐபிஎல் 2023 ஆம் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அதிரடி ஆட்டத்தை அரங்கை அதிர வைத்தார்கள், குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்கள்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் டேவன் கான்வே 1(6) முஹம்மது ஷமி பந்தில் அவுட் ஆகி வேகமாக பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்பின் மொயின் அலி குஜராத் பவுலர் ரஷீத் கான் இடம் தனது விக்கெட் பறிகொடுத்தார், அணிகளும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். சென்னை அணியின் முன்னணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் மழை பொழிந்தார்.
ஐபிஎல் 2023 ஆம் முதல் போட்டியிலேயே ருதுராஜ் சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 92(50) ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தார். இறுதியாக தோனியின் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் பதிவு செய்து அசத்தியது.குஜராத் அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த ரஷீத் கான், ஷமி, அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே சென்னை அணியின் பேட்டிங் ரசிகர்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்துள்ளது, அதே போல் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி சென்னை அணி குஜராத் அணியை தோற்கடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது