சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி...மீண்டும் மும்பை தோல்வி!| IPL 2023 MI vs CSK Highlights
![சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி...மீண்டும் மும்பை தோல்வி!| IPL 2023 MI vs CSK Highlights](https://www.sportspartans.com/assets/uploads/news-2053.jpg)
ஐபிஎல் 2023 ஆம் தொடரின் 12 வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையே நடைபெற்று முடிந்து விட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலாவதாக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தடாலடியான ஆரம்பத்தை முன் வைத்தது. இருப்பினும் ஜடேஜாவின் சாதுர்யமான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆட்டத்தின் இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களுள் டெவோன் கான்வே 0 ரன்கள் எடுத்து முதலாவதாக அவுட் ஆகி வெளியேறினார். இதனால் ஆட்டம் தொடக்கத்திலையே சென்னை அணி சிரமத்தில் இருந்தது. அதற்கு பின் களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி அடித்து துவண்டு போன ஆட்டத்தை சுறுசுறுப்பாக மாற்றினார். சென்னை அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்ற ரஹானே 61(27) பியூஷ் சாவ்லாவின் பந்து வீச்சால் 8வது ஓவரில் அவுட் ஆகினார்.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே இருவரும் நிதானமாக விளையாடி சென்னையின் வெற்றி வாய்ப்பை அதிகரித்து வந்தனர். இருப்பினும் 14வது ஓவரில் குமார் கார்த்திகேயாவின் பந்து வீச்சால் சிவம் துபே 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துபே விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராயுடு அட்டகாசமாக விளையாடி சென்னை அணியை வெற்றியடைய செய்தனர். ரசிகர்களுக்கு என்ன ஒரு வருத்தமெனில் தோனி இந்த போட்டியில் விளையாட வேண்டிய அவசியம் இல்லாதது குறிப்பிட தக்கது.
இருப்பினும் வந்த வேகத்தில் வெறித்தனமாக விளையாடி மும்பை அணியை கதற விட்டனர் சென்னை சூப்பர் கிங்ஸ். 7 விக்கெட் வித்தியாசத்தில் 18.1 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அசால்டாக வெற்றி பெற்றனர்.