WOMEN’S T20 WORLD CUP 2023: முதல் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்திய அணி..!! புதிய சாதனையை படைத்தது.!!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வெற்றி பெற்று அசத்தியுள்ளது, மேலும் உலக கோப்பை அரங்கில் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.
இந்திய அணி உலக கோப்பை பயணத்தில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது ரசிகர்கள் இடையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகள் சற்று தடுமாற பொறுப்புடன் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ஆட்டமிழக்காமல் 68*(55) ரன்கள் பெற்றார், அவருக்கு உதவிய அணியின் இளம் பிளேயர் ஆயிஷா நாசிம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43*(25) ரன்களை பதிவு செய்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை பதிவு செய்தது.
இந்நிலையில் 150 ரன்கள் எடுத்தால் என்று கடின இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி அணியின் தொடக்க வீராங்கனைகள் நிலையான தொடக்கத்தை அளித்து ஆட்டமிழந்த நிலையில்,பாகிஸ்தான் அணியின் பவுலிங்கை சிதறடித்து மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய அணியின் இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53*(38) ரன்களை பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல்சிறப்பாக விளையாடிய இளம் வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் 19 ஓவர்களில் 151 ரன்கள் பெற்று இந்திய அணியின் முதல் வெற்றியை உலககோப்பை அரங்கில் பதிவு செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலககோப்பை அரங்கில் பெற்ற அதிகபட்ச ரன் சேசிங் வெற்றியாக இது பதிவானது , இதற்கு முன்னர் உலகக்கோப்பை அரங்கில் நவம்பர் 11 2018 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக 134 ரன்களை அடைந்து பெற்ற வெற்றி தான் இந்திய அணியின் சார்பில் அதிக ரன்களை சேசிங் செய்து பெற்ற வெற்றியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் கேப்டௌனில் வெற்றியுடன் உலககோப்பை பயணத்தை தொடங்கிய இந்திய மகளிர் அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்க்கது.