IND VS AUS ODI 2023 : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு செய்வதில் தொடரும் குழப்பங்கள்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முடிவு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக இந்திய அணியின் பவுலர்களை தேர்வு செய்வதில் தான் அதிகம் குழப்பம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த நிலையில், அடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் ஒரு நாள் உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக விலகியுள்ளார், இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முடிவு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் துவக்க வீரர்கள் இடத்தில் இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் களமிறங்க வாய்ப்புள்ளது, மற்றும் மிடில் ஆர்டரில் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்க உள்ள நிலையில் மிகவும் பலமாக இந்திய அணி உள்ளது. இதையடுத்து இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர் மற்றும் ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் நிலையில் எந்த இருவரை அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் பெற வைப்பது என்பதில் பெரிய குழப்பம் நீடிப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் சிறந்த பார்மில் உள்ளதால் முதல் ஒருநாள் போட்டியில் யார் இடம்பெறுவர் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாஷிங்டன் சுந்தரும் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்து அணியின் ஸ்பின்னர்கள் பிரிவில் சாஹல், குல்தீப் யாதவ் இருவரில் யாரை ப்ளேயிங் லெவனில் எடுப்பது என்பதிலும் குழப்பம் நிகழ்வதாக அணி நிர்வாகத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஹர்திக் பாண்டியா முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட உள்ள இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்து தனது கேப்டன்சி திறனை நிரூபிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.