IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்..?? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு.!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வரும் மார்ச் 9ஆம் தேதி விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலையில் இருந்த போது கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று தொடரை விறுவிறுப்பாக மாற்றியது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியின் வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வாய்ப்பை பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது, அதே சமயத்தில் இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இந்த தொடரில் 2 வெற்றிகளை பெற்று முன்னணியில் இருந்தாலும், அணியின் வீரர்கள் யாரும் இதுவரை பெரிய அளவில் ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இந்நிலையில் இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அணியின் பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தும் விதத்தில் முக்கிய மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் இளம் வீரர் இஷான் கிசானுக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக உள்ள கே.எஸ்.பரத் இடத்தில் இஷான் கிசான் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் 3 வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்க பட்ட அணியின் முன்னணி பவுலர் முகமது ஷமி கடைசி டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் பதில் விளையாட உள்ளதாக தெரிகிறது.இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அனைத்து விதத்திலும் முழு வீச்சில் போராடும் என்பது மட்டும் உறுதி.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் மார்ச் 9ஆம் தேதி (நாளை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ள நிலையில், இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.