காதலியை கரம் பிடிக்கும் கே.எல்.ராகுல்..! ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சி பதிவு...!

இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கும் கே.எல்.ராகுல் தனது நீண்ட நாள் காதலியான நடிகை அதியா ஷெட்டியை கரம் பிடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை உறுதி செய்யும் விதமாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து முக்கிய காரணத்திற்காக கே.எல்.ராகுல் விலகியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
இந்திய அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கி வந்த கே.எல்.ராகுல் சமீப காலமாக அணியின் பேட்டிங்கை பல படுத்தும் விதத்தில் அணியின் நம்பர்-5 பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டு வருகிறார்.அண்மையில் இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் அணியின் வீரர்கள் அனைவரும் உடனுக்குடன் ஆட்டமிழக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முக்கிய காரணத்திற்காக கே.எல்.ராகுல் விலகியுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்தது, இந்நிலையில் தனது காதலியான நடிகை அதியா ஷெட்டியை கே.எல்.ராகுல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிய வந்துள்ளது.
அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார், ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மும்பை உள்ள இல்லத்தில் திருமணம் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது, இந்த திருமணத்தில் இந்திய அணியின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதால் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவருக்கும் தங்களின் திருமண வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.