தலைமை தேர்வுக்குழு தலைவர் பதவியில் சேத்தன் சர்மா விலகினார்..!! பிசிசிஐயில் தொடரும் குழப்பங்கள்…!!

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளார், கடந்த ஒரு சில நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவை சேத்தன் சர்மா எடுத்துள்ளதாகவும் மேலும் அவரது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் படு தோல்வியை தழுவிய நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு கலைக்கப்பட்டு புதிய தேர்வு தேர்வு குழுவை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்தது, ஆனால் பழைய தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்த சேத்தன் சர்மா வை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்தது மற்ற உறுப்பினர்களைக் புதிதாக தேர்வு செய்து பிசிசிஐ அறிவித்தது.
அதன்பின் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் 2வது முறையாக இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சேத்தன் சர்மா இந்திய அணியை பற்றியும் இந்திய வீரர்கள் பற்றி பேசிய காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது, இந்த காணொளியை ஒரு தனியார் தொலைக்காட்சி சேத்தன் சர்மாவுக்கு தெரியாமல் பதிவு செய்து வெளியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த காணொளிகள் இணையத்தில் பரவி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனை குறித்து பிசிசிஐ மற்றும் சேத்தன் சர்மா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், தற்போது தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விற்கு அனுப்பிய உள்ளதாகவும், அதை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கூடிய விரைவில் இந்திய அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் பதவிக்கு கிழக்கு மண்டல தேர்வுக்குழு தலைவர் சிவ சுந்தர் தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது, இந்த செய்தி தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.