சர்வதேச கிரிக்கெட் அரங்கில் உச்சம் தொட்ட இந்திய அணி..!! மாபெரும் சாதனையை படைத்தது..!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்திய நிலையில் இந்த சாதனை அரங்கேறி உள்ளது.
ஐசிசி தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முதல் இடத்தில் இந்திய அணி உள்ள நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் முதல் இடத்திற்கு முன்னேறிய நிலையில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்திய அணி அண்மையில் நடந்த ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணியை வைட்வாஸ் செய்த நிலையில் ஐசிசியின் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது, மேலும் 2022 ஆம் ஆண்டு ஐசிசி யின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற நிலையில், தற்போது வெளியான ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரே சமயத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று தொடர்களிலும் சர்வதேச அரங்கில் முதல் இடத்தை பிடித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறை இந்த சாதனையை படைத்த நிலையில், தற்போது 2 வது அணியாக சர்வதேச அளவில் இந்திய அணி இந்த சாதனையை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.