இந்தியா vs இலங்கை : இரண்டாவது டி-20 போட்டியின் கணிப்புகள்,விவரங்கள்..! இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ..??

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 04, 2023 & 18:30 [IST]

Share

இந்திய மண்ணில் இலங்கை அணி 3-டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது, இதில் முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்நிலையில் அடுத்த போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி,உடனுக்குடன்  விக்கெட்டுகளை இழந்தது, இறுதியாக ஜோடி சேர்ந்த ஹூடா மற்றும் அக்சர் கூட்டணி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

அதே போல் இரண்டாவது இன்னிங்சில் தொடக்கத்தில் சொதப்பிய இலங்கை வீரர்கள்,அதன்பின் அதிரடியாக விளையாடிய  அணியின் கேப்டன் தசுன் ஷனக வெற்றியின் அருகில் தனது அணியை அழைத்து சென்று அவரது விக்கெட்டை இழந்தார்,இறுதியாக  கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இந்த தொடரின் 2-வது டி20 போட்டி நாளை (ஜனவரி-5) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.முதல் போட்டியில் இரு அணிகளும் சமமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் வகையில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் நோக்கில் இலங்கை அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 போட்டி விவரங்கள் : 

முதல் டி-20 போட்டி : இந்தியா vs இலங்கை 

மைதானம் : மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்,புனே.   

தேதி  & நேரம் : 5/01/2023 & 7:00 p.m (IST)

நேரடி ஒளிபரப்பு  : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார்.

கிரிக்கெட் பிட்ச் அறிக்கை :

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை இரண்டு டி-20 போட்டிகளில் புனேவில் உள்ள  மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விளையாடி உள்ளார்கள்,இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 160 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது டி-20  போட்டியில் டாஸ் பெரிய வகையில் முக்கியமில்லை,ஏனென்றால் இதுவரை இந்த மைதானத்தில் நடந்த 50 டி-20 போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாவது பேட்டிங் செய்த இருஅணிகளும் சமமான வெற்றிகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியா vs இலங்கை டி-20 போட்டிகள் விவரம்:

மொத்தம் : 27

இந்திய அணி வெற்றி : 18

இலங்கை அணி வெற்றி: 8

ரத்தான போட்டிகள்  : 1

இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : இஷான் கிஷன் (வி.கீ), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன் ), தீபக் ஹூடா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங்/ஹர்ஷல் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (வி.கீ ), அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க.