இந்தியா இலங்கை முதல் ஒருநாள் போட்டியின் கணிப்புகள், பிட்ச் அறிக்கை ,பிளேயிங்-11 குறித்த விவரங்கள் :

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 09, 2023 & 14:44 [IST]

Share

இலங்கை அணி இந்திய மண்ணில் 3-டி20 போட்டிகள் மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது ,இதில் டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது.இந்நிலையில் அடுத்து நடக்க இருக்கும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி அதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா வங்கதேச தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார்,இந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள்  தொடரில் களமிறங்கி இந்திய அணியை வழிநடத்த உள்ளார் மேலும் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஓய்விலிருந்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார்கள்.அதேபோல் டி20 தொடரை இழந்த இலங்கை அணி எப்படி ஒருநாள் தொடரை எதிர்கொள்ளப் போகிறது போன்ற கேள்விகள்  முதல் ஒருநாள் போட்டி குறித்த ஆர்வத்தை ரசிகர்கள் இடையில் அதிகரித்து உள்ளது.

இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டி விவரம் :

தேதி  : 10/01/2023 (செவ்வாய்க்கிழமை)

நேரம் : 1:30(p.m) IST 

இடம்  : பர்சபர கிரிக்கெட் மைதானம்,குவஹாத்தி.

ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் / டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.

 முதல் ஒருநாள் போட்டியின் வெற்றி கணிப்பு :

இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி நல்ல உற்சாகத்தில் இருப்பதால், முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தை தருவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இலங்கை அணியின் டி20 தொடர் தோல்வியை மறந்து விட்டு புதிய ஆரம்பத்தை எதிர்நோக்கி ஒருநாள் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய மண்ணில் நடக்கும் இந்த முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு தான் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் போட்டிகள் விவரம் : 

மொத்த போட்டிகள்                           : 162

இந்திய அணியின் வெற்றிகள்       : 93  

இலங்கை அணியின் வெற்றிகள்  :  57

டிரா ஆனா போட்டிகள்                    : 1

முடிவு அறியப்படாமல் போன போட்டிகள் : 11

பிட்ச் அறிக்கை : 

முதல் ஒருநாள் போட்டி நடக்கும் குவஹாத்தியில்  உள்ள பர்சபர கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன் மற்றும் பௌலர் இருவரும் சம அளவில் ஒத்துழைக்கும் தன்மையை உடையது, குறிப்பாக இந்த பிட்ச் ஸ்பின் பௌலர் களுக்கு மிகவும் உதவும் என்று தெரிகிறது.இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 250 ரன்களை அடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிளேயிங் 11 (தோராயமாக) : ரோஹித் சர்மா (கேப்டன்),சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா(து.கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி.

இலங்கையின் பிளேயிங் 11 (தோராயமாக) :  பதும் நிஸ்ஸங்க,குசல் மெண்டிஸ் (வி.கீ),அவிஷ்கா பெர்னாண்டோ, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க,சாமிக்க கருணாரத்ன,மஹீஷ் தீக்ஷன,டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார.