இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்று நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு `12வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் எடுத்தது. எனவே, இந்தியா 192 ரன் இலக்குடன் அடுத்து விளையாட ஆரம்பித்தது.
இந்தியா அணி பேட்டிங்
இந்தியா அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 2வது ஓவரில் சுப்மன் கில் (16) ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் விராட் கோலி களமிறங்க இந்தியா அணி வேகமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் விராட் கோலி (16) 9வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா (86) தனது விக்கெட்டை இழந்தார்.. ஷ்ரேயாஸ் ஐயர் (53) , கேஎல் ராகுல் (19) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியா அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷஹீன் ஷா அப்ரிடி (2), ஹசன் அலி (1) விக்கெட்டுகள் எடுத்தனர்.