இந்தியா மற்றும் நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் பதிவான சாதனை துளிகள் …!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 19, 2023 & 16:15 [IST]

Share

இந்திய மற்றும் நியூசிலாந்து அணி இடையே முதல் ஒருநாள் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மிகவும் அதிரடியாக நடந்து முடிந்தது,அந்த ஒரு போட்டியில் பல முன்னணி வீரர்களின் சாதனைகள் முறியடிக்கப்பட்டு சிறப்பான சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த போட்டியில் மோதிய இரு அணிகளும் தங்களின் திறனை நிரூபிக்கும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள், இந்த ஒரு  போட்டியில் மட்டுமே பல புதிய சாதனைகள் பதிவானது குறிப்பாக பல சாதனைகள் முறியடிக்க பட்டது.

சாதனை துளிகள் ஒரு பார்வை : 

1) இந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 23-வயது சுப்மன் கில் , மிகவும் இளம் வயதில் வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.அதற்கு முன்னர் 24-வயது இஷான் கிஷான் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

2) இந்த போட்டியில் விளையாடிய இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் குறைந்த இன்னிங்சில்(19) 1000 ரன்கள் மேல் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார், அதற்கு முன்னர் 24 இன்னிங்சில் இந்த சாதனையை புரிந்து   இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் முதலிடத்தில் இருந்தனர்.  

3) இந்திய வீரர்  சுப்மன் கில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து 200 ரன்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

4) ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.

5) ஒருநாள் தொடரில் இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் (125) அடித்த இந்திய வீரராக ரோகித் சர்மா முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியை பின் தள்ளி முதல் இடத்தை பெற்றார்.

6) நியூசிலாந்து அணி சார்பில் நம்பர் 7 வது  இடத்தில் பேட்டிங் செய்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் பிரேஸ்வெல் சதம் அடித்ததன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் தோனியின் சாதனையை சமன் செய்தார்.

7) நியூசிலாந்து அணி சார்பில் ஜோடி சேர்ந்த பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் அடித்த 162 ரன்கள் தான் ஒருநாள் தொடரில் 7 வது விக்கெட்டுக்கு பதிவான ரன்களில் 3வது இடத்தில் உள்ளது ,மேலும் நியூசிலாந்து அணியின் 7 வது விக்கெட்டுக்கு பதிவான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.   

இந்த முதல் ஒருநாள் போட்டியிலேயே பல புதிய சாதனைகள் மற்றும் அதிரடி சம்பவங்கள் அரங்கேறிய  நிலையில் அடுத்து வரும் இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரசிகர்கள் இடையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது