இந்தியா vs நியூசிலாந்து : ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி அசத்தல்..! உலக கோப்பை உறுதி என்று ரசிகர்கள் கொண்டாட்டம்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ராய்ப்பூரில் மோதிய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணி வீரர்களை சிதறடித்தார்கள்.ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் 1 அணியாக விளங்கும் நியூசிலாந்து அணியை இந்திய மண்ணில் வைத்து தரமான சம்பவத்தை செய்து விட்டார்கள்.
இந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றி விடும், அதேபோல் நியூசிலாந்து அணி வென்றால் நியூசிலாந்து அணி வென்றால் தொடரை சமன் செய்து விடும் என்பதால் மிகவும் முக்கியமான போட்டியாக இது கருதப்பட்டது. இந்திய அணியின் பௌலர்கள் தங்களின் அதிரடியால் இந்த போட்டியை நிலைமையை மாற்றி விட்டார்கள்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய வேகப்பந்து பவுலர்களை சமாளிக்க முடியாமல் உடனுக்குடன் தங்களின் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்கள், இந்நிலையில் நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே பதிவு செய்தது.
இந்திய அணி பவுலர்கள் மிகவும் அருமையான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள், குறிப்பாக முகமது ஷமி 3 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும் சாய்த்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். நியூசிலாந்து அணி சார்பில் க்ளென் பிலிப்ஸ் 36(52) ரன்கள் பெற்றார், மேலும் ஒரு சிக்ஸர் கூட முதல் இன்னிங்ஸில் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.இந்நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 20.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற நிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இந்திய அணி உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியாக இருக்கும் நியூசிலாந்து அணியுடன் மோதி தொடரை கைப்பற்றியது பார்க்கும் பொழுது ஒரு நாள் உலக கோப்பைக்கான பயணத்தில் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.