IND VS AUS TEST 2023 : ஜடேஜாவின் சூழலில் சரிந்தது ஆஸ்திரேலியா அணி..! இந்திய பவுலர்கள் அசத்தல்..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நாக்பூரில் பலபரிச்சை மேற்கொண்டு வருகிறார்கள், இந்திய அணி தனது சிறப்பான பவுலிங் மூலம் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சிதறடித்து என்று கூறலாம்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இந்திய அணியின் வேகப்பந்து பவுலர்கள் அதிரடியில் வேகமாக பெவிலியன் திரும்பினார்கள்.
இந்திய அணியின் வேகப்பந்து பௌலர்கள் முகமது சிராஜ் மற்றும் முகம்மது ஷாமி சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினார்கள், அதன்பின் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் சூழலில் ஆட்டமிழந்தார் கள்.
இந்திய அணிக்கு காயத்தில் இருந்து மீண்டு வந்த அசத்தல் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது சிறப்பான பௌலிங் மூலம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் லாபுசாக்னே மற்றும் ஸ்மித் உடைய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு மிகவும் உதவினார்.
அதேபோல் களத்தில் இறங்கி அசத்திய இந்திய அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சூழலின் மூலம் அலெக்ஸ் கேரி,பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடியும் முன்னரே ஆஸ்திரேலிய அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே 49(123) ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 177 ரன்களில் ஆல் அவுட் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது, இந்த தொடரின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.