IND VS AUS TEST 2023 : இந்திய அணி நிதான ஆட்டம்..!! கில், கோலி அசத்தல்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பொறுப்புடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், தற்போதைய நிலையில் இந்திய அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி 2வது நாள் முடிவில் 480 ரன்கள் பதிவு செய்தது, இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான ஆரம்பத்தை அளித்தார்கள்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 35(58) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் கில் டெஸ்ட் அரங்கில் தனது 2 வது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.அதன்பின் ஜோடி சேர்ந்த கில் மற்றும் செதேஷ்வர் புஜாரா இருவரும் நல்ல பார்ட்னெர்ஷிப் ஏற்படுத்தி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை திணறடித்தார்கள்.
இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அனுபவ வீரர் புஜாரா 42(121) ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் 128(235) ரன்கள் பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய பவுலர் நாதன் லியோனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்கள்.
இதையடுத்து 3 வது நாள் முடிவில் விராட் கோலி அரைசதம் கடந்து 59*(128) ரன்களிலும் , ஜடேஜா 16*(54) ரன்களிலும் களத்தில் உள்ளார்கள், மேலும் இந்திய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாள் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பார்த்த இந்திய அணியின் ரசிகர்கள்,கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் நம்பிகையுடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.