IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டியில் சறுக்கிய இந்திய அணி.!! வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ..!! சோகத்தில் ரசிகர்கள்.!!

பார்டர் கவாஸ்கர் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெல்லியில் விளையாடி வரும் நிலையில் 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணியின் பவுலிங்கில் சறுக்கிய இந்திய அணி, வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி என அனைத்தையும் விவரமாக காண்போம்.
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இந்நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாளை விக்கெட் எதுவும் இழக்காமல் சிறப்பாக நிறைவு செய்தது . அதை எடுத்து 2வது நாள் தொடக்கத்தில் பவுலிங்கில் அசத்திய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை விரைவாக பெற்றனர்.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அணியின் தூணாக விளங்கும் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி இந்திய ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். அதன்பின் அணியின் ரன் மெஷின் விராட் கோலி 44(84) ரன்கள் பெற்று ஏமாற்றம் அளித்து பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில் வழக்கம் போல் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அணியின் நிலையை மீட்டு எடுக்கும் விதத்தில் ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் மற்றும் அஸ்வின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் அணிக்காக ஜோடி சேர்ந்து இருவரும் 100 ரன்கள் பெற்று அசத்தினார்கள்.
அதன்பின் ரவிச்சந்திரன் அஸ்வின் 37(71) ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஆல்ரவுண்டர் அக்சர் படேல் 74(115) ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கடைசி நம்பிக்கையும் கலைந்தது, இறுதியாக 262 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய நாதன் லியோன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா 6(13) ரன்களில் ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார், இறுதியாக 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.