IND VS AUS TEST 2023 : இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி நிதான ஆட்டம்..!! ரோஹித் சர்மா, ஜடேஜா, அக்சர் படேல் அசத்தல்.!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நாக்பூரில் விளையாடி வரும் நிலையில் இரண்டாவது நாள் முடிவில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் நல்ல நிலையில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து, பேட்டிங் செய்ய களமிறங்கி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 77 ரன்கள் பதிவு செய்து வலுவான நிலையில் இருந்தது. இந்நிலையில் 2 வது நாள் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா அணியின் பவுலர்கள் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்திய அணியின் வீரர்கள் ஒருபுறம் ஆஸ்திரேலியா பவுலிங்கில் ஆட்டமிழந்த நிலையில் நிதானமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார்,குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் அறிமுக இளம் பவுலர் டாட் மர்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதேபோல் தனி ஒருவனாக இந்திய அணிக்கு ரன்கள் குவித்து காப்பாற்றிய ரோஹித் சர்மா 120(212) பேட் கம்மின்ஸ் ஒவேரில் ஆட்டமிழந்தார், அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் ஆல்ரவுண்டர் கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் நிதானமாக விளையாடினார்கள். இந்திய அணிக்காக பவுலிங்கில் அசத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அதேபோல் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
இந்த போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் பதிவு செய்து 144 ரன்கள் முன்னிலையில் உள்ளது, இதற்கு முக்கிய காரணமாக நிதானமாக பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்த அணியின் ஆல்ரவுண்டர் கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணியின் வீரர்கள் ஜடேஜா 66*(170) மற்றும் அக்சார் 52*(102) களத்தில் உள்ளார்கள், எனவே நாளையும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய அணி நல்ல ஸ்கோரை அடைய இருவரும் உதவுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.