IND VS AUS TEST 2023 : முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா..! ஜடேஜா அபாரம்..! ரோஹித் நிதானம்..! ரசிகர்கள் நம்பிக்கை..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது, சிறந்த பவுலிங் மூலம் ஆஸ்திரேலியா வீரர்களை இந்திய பவுலர்கள் சிதறடித்தனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார், இதையடுத்து பௌலிங் செய்த இந்திய அணியினர் ஆரம்பம் முதலே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கலங்க வைத்தனர்.
இந்திய அணியின் வேகப்பந்து பவுலர்கள் சிராஜ் மற்றும் ஷமி நல்ல தொடக்கத்தை அளித்தார்கள், அதனால் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள்.அதன்பின் களத்தில் இறங்கிய அணியின் சூழல் பவுலர்கள் அசத்தல் பௌலிங்கை வெளிப்படுத்தி அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், குறிப்பாக நல்ல பார்மில் இருந்த மார்னஸ் லாபுசாக்னே 49(123) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 37(107) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார், பிறகு அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி வலுவான தொடக்கம் கொடுத்தார்கள், ராகுல் 20(71) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 56*(69) ரன்களில் களத்தில் இருந்தார்.
இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த போட்டி முழுவதும் இந்திய அணி இதே போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.