IND VS AUS ODI 2023 : முதல் ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, கணிப்புகள் ஒரு பார்வை..!! | ind vs aus 1st odi 2023 preview

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளார்கள், இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்புகள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை பற்றி காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கைப்பற்றி அசத்தியது. மேலும் அடுத்து நடைபெற உள்ள ஒரு நாள் தொடர் ஆனது ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுவதால் இரு அணிகளும் தொடரை கைப்பற்ற முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டி குறித்த விவரங்கள் :
போட்டி : முதல் ஒருநாள் போட்டி
நாள் & தேதி : வெள்ளிக்கிழமை & 17/03/2023.
நேரம் : 1:30 P.M (IST).
மைதானம் : வான்கடே, மும்பை.
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி +ஹாட்ஸ்டார்.
பிட்ச் அறிக்கை :
முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் உதவும் என்பதால், இந்த போட்டியில் ரன்கள் பெரிய அளவில் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 260 ரன்கள் பதிவு செய்துள்ளனர் ,மேலும் இந்த பிட்ச் சேஸிங் செய்வதற்கு மிகவும் உதவும் என்று தெரிய வந்துள்ளது.இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகள் சார்பில் அதிரடி ஆட்டத்தை எதிர் பார்க்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வெற்றி கணிப்பு :
முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக விலகியுள்ளதால் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி செயல்பட உள்ளது.
இந்திய மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி ஆகா வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது, எனவே இந்த ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் வகையில் முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு கட்டாயம் வெற்றி பெற முழுவீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒருநாள் தொடரில் முழுமையாக விலகி உள்ள நிலையில் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட உள்ளார், மேலும் அணியில் முன்னணி வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு இணைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர் தோல்விக்கு ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டிற்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் விவரங்கள் :
மொத்த போட்டிகள் : 143
இந்தியாவின் வெற்றிகள் : 53
ஆஸ்திரேலியா வெற்றிகள் : 80
ரத்தன போட்டிகள் : 10
இந்திய அணியின் பிளேயிங் லெவன்(தோராயமான) : சுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி/உம்ரான் மாலிக்.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன்(தோராயமான) : டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (வி.கீ), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், சீன் அபோட்.