IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்பு முக்கிய தகவல்கள் ஒரு பார்வை..!!

பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியாக 4வது டெஸ்ட் போட்டி விளங்கும் நிலையில், இந்த போட்டி குறித்து முக்கிய தகவல்களை காண்போம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் மற்றும் ஆஸ்திரேலிய அணி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இறுதியாக நடைபெற உள்ள 4 வது டெஸ்ட் போட்டி தொடரின் முடிவை மாற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
டெஸ்ட் போட்டி குறித்த விவரங்கள் :
போட்டி : இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி
மைதானம் : நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
போட்டி தொடங்கும் நாள் & நேரம் : வியாழக்கிழமை & 9:30 A.M (IST)
போட்டி நடைபெறும் தேதிகள் : மார்ச் 9 முதல் - மார்ச் 13 வரை
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி + ஹாட்ஸ்டார்
வெற்றி கணிப்பு :
இந்த தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று முன்னிலையில் உள்ளது, மேலும் 3 வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில் கடைசி (4வது) டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும், அதே சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கடைசி டெஸ்ட் போட்டியின் வெற்றி தான் முடிவு செய்யும் என்பதால் இந்திய அணி முழுவீச்சில் கட்டாய வெற்றியை நோக்கி விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை புதிய கேப்டன் ஸ்மித் தலைமையில் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு 3 வது டெஸ்ட் போட்டியில் மிரட்டல் வெற்றியை பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது, மேலும் 3 வது டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளும் 4 வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, எனவே தற்போதைய நிலையில் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் அறிக்கை :
பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இந்தியாவின் மற்ற மைதானங்கள் போல் ஸ்பின் பவுலிங் தான் சிறப்பாக செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனென்றால் போட்டியின் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த தொடரில் இடம்பெற்ற மற்ற போட்டிகள் போல் 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி விவரங்கள் :
மொத்த போட்டிகள் : 105
இந்திய அணி வெற்றிகள் : 32
ஆஸ்திரேலியா அணி வெற்றிகள் : 44
டிராவில் முடிந்த போட்டிகள் : 28
டை ஆனா போட்டி : 1
இந்திய அணியின் பிளேயிங் லெவன் (தோராயமான) : ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் (தோராயமான) : டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, செவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன்.