IND VS AUS TEST 2023 : 4வது டெஸ்ட் போட்டி டிரா ..!! பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா வென்றது..!! | ind vs aus test 2023 update

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வந்த 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற நிலையில் தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதிப் போட்டியாக அமைந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழிந்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் பதிவு செய்தது,குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியின் இடது கை தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 180(422) ரன்கள் பெற்றார் மேலும் இளம் வீரர் கேமரூன் கிரீன் 114(170) சதம் அடித்து அசத்தினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணி அளித்த 480 ரன்கள் இலக்கை கடந்து, 91 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. இந்திய அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் தொடக்க வீரர் சுப்மான் கில் 128(235) ரன்கள் பதிவு செய்தார், மேலும் அணியின் முன்னணி அதிரடி வீரர் விராட் கோலி தனது 28 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 186(364) ரன்கள் பெற்றார், அணியின் அசத்தல் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் 79(113) ரன்கள் பெற்று அணிக்கு மிகவும் உதவினார். இந்திய அணி 571 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணி அளித்த இலக்கை அடைந்து முன்னிலை பெற்று 2 விக்கெட் இழந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது, குறிப்பாக டிராவிஸ் ஹெட் 90(163) ரன்கள் பதிவு செய்தார். அதன்பின் போட்டி முடிய ஒரு மணி நேரம் முன்னதாக போட்டி டிரா ஆனது என்று அறிவிக்கப்பட்டது, தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் மிகவும் அதிரடி நிறைந்த போட்டியாக 4வது டெஸ்ட் போட்டி அமைந்தும் டிராவில் முடிந்தது, இந்திய அணி சார்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய முன்னணி வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தொடர் நாயகன் விருதை பகிர்ந்து கொண்டனர்.
இந்திய அணி இந்த தொடரின் வெற்றி மூலம் 4வது முறையாக தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.