IND VS AUS TEST 2023 : விராட் கோலி, அக்சார் அசத்தல் ஆட்டம் ..!! இந்திய அணி முன்னிலை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர்கள் அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை சிதறடித்தார்கள். இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி அளித்த இமாலய இலக்கை கடந்து முன்னிலை பெற்று அசத்தியது.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் பதிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது, குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 128(235) ரன்கள் பதிவு செய்தார்.
அதன்பின் இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த தனது 28 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார். இந்திய அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தினால் இந்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்து 44(88) ரன்கள் பெற்று ஆட்டமிழந்தார், பின்பு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 79(113) ரன்கள் பதிவு செய்து பெவிலியன் திரும்பிய நிலையில் இந்திய அணியின் நிலையான பேட்டிங் முடிவுக்கு வந்தது.
அதாவது இறுதிவரை தனி ஒருவனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரன் மெஷின் விராட் கோலி 186(364) ரன்கள் பெற்ற போது டாட் மர்பி இடம் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 571 ரன்கள் பதிவு செய்து, 91 ரன்கள் முன்னிலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய 4 வது நாள் முடிவில் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 ரன்கள் பதிவு செய்து 88 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அசத்தலான 4வது டெஸ்ட் போட்டி வெற்றியில் முடியுமா..?? இல்லை டிராவில் முடியுமா..?? என்பது நாளை நடைபெற உள்ள 5வது நாள் ஆட்டத்தில் தெரியும் என்பதால் ரசிகர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் போட்டியை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.