3 வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது..!! பிளையிங் 11 ல் புதிய மாற்றங்கள்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், சென்னையில் நடைபெற உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முக்கிய வீரர்களை களமிறக்கி உள்ளது. அதே சமயத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் 2வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அணியோடு களமிறங்கி உள்ளது.
இந்திய மண்ணில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்ற நிலையில் தொடரில் சமமாக உள்ளது. இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், இந்த போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் முன்னணி வீரர் டேவிட் வார்னர் அணியில் இணைந்துள்ளார், அதே சமயத்தில் கேமரூன் கிறீன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அணியில் இடம்பெறவில்லை, அவருக்கு பதில் ஆஸ்டன் அகர் பிளேயிங் 11 ல் இணைந்துள்ளார். இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்து இருந்தாலும், அதே அணியோடு 3 வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பிளேயிங் 11 : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் 11 : டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி(வி.கீ), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் அகர், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
இந்த 3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்பது உறுதி, இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.