IND Vs AFG 1st Innings: இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு
![IND Vs AFG 1st Innings: இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு](https://www.sportspartans.com/assets/uploads/news-2407.png)
இன்று அருண் ஜெட்லி டெல்லி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 9வது ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். 6வது ஓவரில் இப்ராஹிம் சத்ரன் (22) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்க ஆப்கானிஸ்தான் ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது ரஹ்மானுல்லா குர்பாஸ்(21`) (12 ) வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு ஹஷ்மத்துல்லா ஷாஹிதி அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடர்ந்து ரஹ்மத் ஷா (16), அஸ்மத்துல்லா உமர்சாய் (62), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி் (80), முகமது நபி (19), நஜிபுல்லா சத்ரன் (2), ரஷித் கான் (16) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ரமுஜீப் உர் ரஹ்மான் (10) , நவீன்-உல்-ஹக் (9) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா (4), ஹர்திக் பாண்டியா (2),குல்தீப் யாதவ்(1), ஷர்துல் தாக்கூர்(1) விக்கெட்ட்டுகள் எடுத்தனர்.