இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!! | india qualified for wtc final 2023

நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்பு உறுதியானது. இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி தேர்வானது, மீதம் உள்ள ஒரு இடத்திற்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் போட்டி உருவான நிலையில் தற்போது நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து புள்ளிபட்டியலில் பின்னடைவை அடைந்தது.
இதையடுத்து இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது, எனவே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணியின் ரசிகர்களுக்கு இந்த மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது, அடுத்து இந்திய அணி தகுதி பெற பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 வெற்றிகள் பெற வேண்டும் அல்லது இந்திய அணிக்கு போட்டியாக உள்ள இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மோத உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றாவது இழக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணி தேர்வாகும் வகையில் நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்த நிலையில், இந்திய அணி புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்று எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உலகின் சிறந்த டெஸ்ட் அணி என்று நிரூபித்துள்ளது