இந்தியா vs இலங்கை தொடர் :தவான்,ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடம் மறுப்பு ..! இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பி.சி.சி.ஐ யின் அதிரடி முடிவு..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 28, 2022 & 11:30 [IST]

Share

இந்தியா மண்ணில் இலங்கை அணி வரும் ஜனவரி மாதத்தில் 3-ஒருநாள் போட்டிகள் மற்றும் 3-டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது, அந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதற்கு முன்னர் வங்கதேச அணியுடன் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது கிரிக்கெட் வட்டாரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது,அதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் தேர்வுக்குழு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

இந்திய அணியின் அனுபவ வீரரான ஷிகர் தவான் இந்த வருடம் முழுவதும் ஒருநாள் போட்டிகளில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்,அவரது சராசரி 34.40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 74.21 மிகவும்  குறைவாக பதிவானதால் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

அடுத்தாக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிசாப் பந்த் இந்த வருடம் முழுவதும் ஒருநாள் போட்டிகளில்  பெரிதாக எந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்ததாலும் ,வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் சொதப்பியதாலும் டி -20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.

 

இந்நிலையில்  இந்திய அணியில் இந்த வருடம் முழுவதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுப்மன் கில்லுக்கு  ஒருநாள் மற்றும் டி -20 தொடர்களில் வாய்ப்பளிக்கப்பட்டுளது.இந்த ஆண்டில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 102.57 மற்றும் சராசரி  70க்கு மேல் என்பது குறிப்பிடதக்கது.

அதே போல் அண்மையில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இஷான் கிஸானின் பெயர் இரண்டு தொடர்களிலும் இடம்பெற்றுள்ளது,மேலும் ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர்க்கு டி-20 அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதன்பின் ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு போன பௌலர்கள் சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் இருவரின் பெயர்களும் டி-20 அணியில் இடம்பெற்றுள்ளது,அவர்களுக்கு இந்திய அணிக்காக முதல் போட்டியை விளையாட வாய்ப்பு வழங்கபடுமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

பிசிசிஐ நிர்வாகத்தின் புதிய தேர்வுக்குழுவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கிரிக்கெட் வட்டாரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,திறமையான பார்மில் உள்ள வீரர்கள் தங்களை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு எதிரான தொடரின் முதல் டி-20 போட்டி  ஜனவரி-3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது,அதன்பின் ஜனவரி 10,12,15 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய  டி-20 அணி : ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (து.கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார். 

இந்திய ஒருநாள் அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர் ), ஹர்திக் பாண்டியா (து.கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் முகமது ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

இலங்கை டி-20 அணி : தசுன் ஷனக (கேப்டன்)வனிந்து ஹசரங்க(து.கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க,அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ச, சரித் அசலங்கா,தனஞ்சய டி சில்வா,அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷனா,சாமிக்க கருணாரத்ன,டில்ஷான் மதுஷங்க,கசுன் ராஜித, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷான், லஹிரு குமார, நுவான் துஷார.   

இலங்கை ஒருநாள் அணி  : தசுன் ஷனக (கேப்டன்),குசல் மெண்டிஸ்(து.கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க,அவிஷ்க பெர்னாண்டோ,சதீர சமரவிக்ரம,சரித் அசலங்கா,தனஞ்சய டி சில்வா, அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க,மஹீஷ் தீக்ஷனா,ஜெஃப்ரி வான்டர்சே,சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் மதுஷங்க,கசுன் ராஜித,நுவனிது பெர்னாண்டோ,துனித் வெல்லலகே,பிரமோத் மதுஷான்,லஹிரு குமார.