IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டி முன்னதாக இந்தோர் மைதானத்தில் இந்திய அணியின் சாதனைகள் ஒரு பார்வை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள இந்தோர் மைதானத்தில் இந்திய அணியின் வீரர்கள் அதிரடி பேட்டிங் மற்றும் இந்திய அணியின் வெற்றிகளை பற்றி காண்போம்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது, இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறும் இந்தோரில் இந்திய அணியின் முந்தைய போட்டிகள் மற்றும் இந்திய வீரர்களின் சிறந்த அதிரடி ஆட்டத்தை பார்க்கும் பொழுது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
இந்திய அணி இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது, இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 326 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது, இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தோரில் நடைபெற்ற 2 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தான் வெற்றியை கைப்பற்றி உள்ளது, மேலும் இந்திய அணியின் வீரர்கள் இந்த மைதானத்தில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார்கள்.
இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் 2016 :
இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார், அப்போது இந்த போட்டியில் 211 ரன்கள் பதிவு செய்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்து அணியை வெற்றி பெற கோலி உடைய அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த அஜிங்கிய ரஹானே இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி உடன் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 188 ரன்கள் பதிவு செய்தார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற விராட் கோலி மற்றும் ரஹானே உடைய இன்னிங்ஸ் முக்கிய காரணம் என்று கூறினால் மிகையில்லை.
இந்தியா vs வங்கதேசம் டெஸ்ட் 2019 :
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2019 ஆம் ஆண்டு இந்தோரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க அகர்வால் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார் , குறிப்பாக 243(330) ரன்கள் பதிவு செய்தார். இந்த மைதானத்தில் ஒரு பிளேயர் உடைய அதிகபட்ச ஸ்கோராக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மயங்க அகர்வால் உடைய இன்னிங்சிஸ் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ரெக்கார்டுகளை வைத்திருக்கும் நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் மார்ச் 1ஆம் தேதி முதல் இந்தோரில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் , 3வது டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இந்தூர் டெஸ்ட் போட்டியில் இரு அணிகள் சார்பில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்பதில் ஐயமில்லை.