ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மோசமான சாதனை..!! | ind vs aus 2023 odi series records

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் மிகவும் மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளது, மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதன் பின் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் மிரட்டல் பவுலிங்கில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிதறினார்கள்.
அதாவது இந்த 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பவுலிங் செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பவுலர் மிச்செல் ஸ்டார்க் மிரட்டல் பவுலிங் வெளிப்படுத்தினார்.மேலும் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஸ்டார்க் வேகத்தில் உடனுக்குடன் தங்கள் விக்கெட்டை ஸ்டார்க் இடம் பறிகொடுத்தனர்.
இந்நிலையில் இந்திய அணி வெறும் 117 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி விக்கெட் எதுவும் இழக்காமல் வெறும் 11 ஓவர்களில் இந்திய அணி அளித்த இலக்கை அடைந்து அசத்தினார்கள்.
இதன்மூலம் இந்திய அணி ஒரு மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது, அதாவது ஒருநாள் தொடரில் இந்தியா அளித்த இலக்கை மிகவும் வேகமாக குறைந்த ஓவர்களில் அடைந்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் 98 ரன்கள் பெற்றது தான் குறைத்த ஓவர்களில் இந்திய அணிக்கு எதிராக இலக்கை அடைந்த போட்டியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றி ஒருநாள் தொடரில் அதிக பந்துகள் மீதம் வைத்து ஒரு அணி பெற்ற வெற்றியாக பதிவாகி உள்ளது, அதாவது ஆஸ்திரேலியா அணி 234 பந்துகள் மீதம் வைத்து 2வது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றி இந்திய அணியின் மோசமான பெரிய தோல்வியாக ஒருநாள் அரங்கில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள 3 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணி தனது நிலையை நிரூபிக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.