இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி..! ஒருநாள் தொடரையும் இழந்தது..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி பரபரப்பாக சென்ற நிலையில், இறுதி வரை போராடிய இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக சந்தித்த தொடர் தோல்விக்கு முடிவு கட்டியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பின் இந்திய அணியின் பவுலிங்கில் சற்று திணற ஆரம்பித்தது, குறிப்பாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்குக்கு முடிவு கட்டி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் பெற முடியாமல் இந்திய அணியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்கள், குறிப்பாக அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சார் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்களையும் பெற்றனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47(47) ரன்களும், அலெக்ஸ் காரி 38(46) ரன்களும் பெற்றனர்.
இந்நிலையில் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 30(17) மற்றும் ஷுப்மான் கில் 37(49) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழநதனர், அடுத்து ஜோடி சேர்ந்த முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார்கள்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 54(72) அரை சதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் அக்சார் பட்டேல் மற்றும் சூரியகுமார் யாதவ் உடனுக்குடன் தங்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்தார்கள்.
ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின்னர் ஆடம் சாம்பா அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி ஹர்திக் மற்றும் ஜடேஜா இருவரின் விக்கெட்டையும் பெற்று இந்திய அணியின் பேட்டிங்குக்கு முடிவு காட்டினார். இந்திய அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 3 வது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் 1-2 என்ற நிலையில் ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா அணியிடன் இந்திய அணி இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததால், 4 ஆண்டுகள் கழித்து இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய அணி ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதலிடத்தை 4 வருடம் கழித்து இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது