WTC FINAL 2021-2023 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் வாய்ப்புகள்..!! ஒரு பார்வை..!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள சாத்தியக் கூறுகளை பற்றி காண்போம்.
இந்திய மற்றும் அசுற்றலை அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. அதன்பின் உலகின் நம்பர் அணியான ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் இறுதி போட்டியில் பங்கேற்க மீதம் உள்ள ஒரு இடத்திற்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு நடுவில் போட்டி நிலவி வருகிறது.அதாவது 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் போட்டிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 68.52 வெற்றி சதவீதத்துடன் முதல் இடம் பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.
அதே சமயத்தில் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 60.29 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது, மேலும் இந்த தொடரில் இந்திய அணிக்கு மீதம் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி உள்ள நிலையில் அதில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறாமல் தோல்வி அல்லது டிராவில் முடித்தால் இலங்கை அணி உடைய தொடர் முடியும் வரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலையை அறிய காத்திருக்க வேண்டும்.
இலங்கை அணி புள்ளி பட்டியலில் 53.33 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது, அடுத்து நியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் சாத்திய கூறுகள் :
1) இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறும் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
2) இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் டிரா செய்தால் வெற்றி சதவீதம் 52.9 ஆக குறையும் நிலையில், இலங்கை அணி நியூசிலாந்து அணியை 2-0 என்ற நிலையில் வைட்வாஷ் செய்ய தவறினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும்.
3) இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியை இழக்கும் நிலையில், நியூசிலாந்து அணி இலங்கை அணியுடன் வைட் வாஷ் ஆவதை தவிர்ப்பது இந்திய அணிக்கு நல்லது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் மார்ச் 9ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட உள்ளார்கள், இந்த போட்டியில் இந்திய அணி நிலை முடிவாகும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் போட்டியை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.