இந்தியா vs இலங்கை : இந்திய பவுலர்கள் அதிரடியால் சிதறியது இலங்கை அணி..!

இந்திய மண்ணில் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி தனது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியிடம் 67 ரன்களில் தோல்வியடைந்தது, அதன்பின் இன்று நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது.
இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்து நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற இலங்கை அணியின் எண்ணத்தை இந்திய அணியின் பௌலர்கள் தங்களின் அதிரடி பௌலிங் கால் சிதறடித்தனர்.
குறிப்பாக இந்திய அணியில் இந்த போட்டியில் இடம்பெற்ற இடது கை ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தனது சூழலில் இலங்கை அணியின் 3 மெயின் பேட்ஸ்மேன்கள் விக்கெட் கைப்பற்றினார், அக்சர் படேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் ,உம்ரன் மாலிக் மற்றும் முகமது ஷமி தங்களின் பவுலிங்கால் எதிர் அணி பேட்டிங்கை பதம் பார்த்தனர். இதில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 5.4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்,அதேபோல் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை பெற்றார்.
இந்திய அணியின் பவுலர்கள் அதிரடியால் இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்நிலையில் இந்திய அணி தனது பேட்டிங்கிலும் அதேபோல் சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.