இந்தியா vs இலங்கை இறுதி டி20 போட்டியின் கணிப்புகள் பற்றிய முழு விவரம்:

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 06, 2023 & 15:20 [IST]

Share

இந்திய மற்றும் இலங்கை அணிகள் விளையாடி டி-20 தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடிய தொடரில் சமநிலையில் உள்ளார்கள்,அடுத்து நடக்க உள்ள இறுதி டி20 போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது.

இந்திய அணி முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது,அதன் பின் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.இந்நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள கடைசி டி20 போட்டியில் இரண்டு அணிகளும் தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தி போட்டியில் விளையாடும் என்பதால் அதனை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள்.

3-வது டி20 போட்டி வெற்றி கணிப்பு : 

இதுவரை தொடரில் இரண்டு அணிகளும் சம அளவில் போட்டி போட்டு  தங்கள் திறனை வெளிப்படுத்தி 1-1 என்ற நிலையில் தொடரில் சமநிலையில் உள்ளார்கள்,எனவே இந்த 3-வது டி20 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டிற்கும் வெற்றி பெற சம வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.

இந்தியா vs இலங்கை 3-வது டி20 போட்டி  விவரங்கள் : 

நாள் : 7/01/2023 (சனிக்கிழமை)

நேரம் : 7:00 p.m(IST)

இடம்  : சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்,ராஜ்கோட்.

ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் & டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப். 

இந்தியா  மற்றும் இலங்கை அணிகளின் வீரர்கள் இதுவரை தொடரில் தங்களின் முழு முயற்சியும் வெளிப்படுத்தி விளையாடி உள்ளதால் ,கடைசி போட்டியில் புதிய வீரர்கள் யாரும் இடம் பெறாமல் அதே அணியுடன் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமான ) : இஷான் கிஷன் (வி.கீ), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணியின் பிளேயிங் 11 (தோராயமான) : பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (வி.கீ), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுகா ராஜபக்ச, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.