ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் உச்சம் தொட்ட இந்திய அணி ..! ரசிகர்கள் ஆரவாரம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 16, 2023 & 09:56 [IST]

Share

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிய இறுதி ஒருநாள் போட்டியில் ஒருநாள் போட்டிகள் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையை படைத்து இந்திய அணி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பல ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்திய அணி உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல் கல்லை பதித்துள்ளது.

இந்திய அணி இலங்கை அணியுடன் இந்த தொடரில் தனது மூன்றாவது மட்டும் இறுதி போட்டி ஒருநாள் போட்டியில் விளையாடியது, இந்த தொடரில் ஏற்கனவே  2 வெற்றிகளை பெற்று முன்னிலையில் இருக்கும் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணி சார்பில் தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் 116(97) அடித்து அசத்தினார்.அதன்பின் அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலி இலங்கை அணியின் பவுலர்களை பதம் பார்த்தார்,மேலும் ஒருநாள் போட்டியில் தனது 46-வது சதத்தை பதிவு செய்தார் குறிப்பாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியை தொடர்ந்த கோலி 166*(110) ரன்களை குவித்தார்.

இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 390 ரன்களை பதிவு செய்தது,இந்த இமாலய இலக்கை அடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெறும் 73 ரன்களில் 22 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர்.

இந்த போட்டியில் இந்திய அணி 317 ரன்களில் வெற்றி பெற்றது, இது  இந்திய அணியின் மிக பெரிய வெற்றியாக பதிவானது.இந்த வெற்றி ஒருநாள் தொடரில் வரலாற்றில் ஒரு அணி அதிகபட்ச ரன்களில் பெரும் வெற்றியாக பதிவாகி இந்திய அணியின் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் போட்டியாக இது அரங்கேறியது.

இதுவரை ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தான் அதிக  ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி  வெற்றி சாதனையாக இருந்தது இதனை இந்திய அணி முறியடிப்பது குறிப்பிடத்தக்கது.