தலைகுப்புற விழுந்த வீரர்.. முகத்தில் வழிந்தது ரத்தம்.. இந்தியா-வங்கதேச டெஸ்டில் சோகம்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 24, 2022 & 11:44 [IST]

Share

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்று பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது முகத்தில் அடிபட்டு காயம் அடைந்தார். மெஹிடி ஒற்றை கையால் கேட்ச் பிடிக்க முயற்சி செய்தும் பந்தை தவறவிட்டார் மற்றும் கீழே தலை குப்புற விழுந்து முகத்தில் காயமும் ஏற்பட்டது.

ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் பேட்டிங் செய்து 44வது ஓவரில் தஸ்கின் அகமதுவின் இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி விளாசினார். அடுத்ததாக தஸ்கின் ஒரு பவுன்சரை வீசினார். அதனை ஸ்ரேயாஸ் ஸ்கொயர் கட் செய்து திருப்பி அடித்தார். ஆனால் பந்து நேராக கல்லி நிலைக்குச் சென்றது. அங்கு மெஹிடி இதை கேட்ச் பிடிக்க முயன்றார்.

ஆனால் கேட்சை தவறவிட்டதோடு, தலைகுப்புற கீழே விழுந்ததால், முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. இதையடுத்து அணியின் பிசியோ மூலம் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

எனினும் அவர் விரைவிலேயே மீண்டும் ஆடுகளத்திற்குத் திரும்பினார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் கைவிடப்பட்ட கேட்ச் அவருக்கு சாதகமாகி அரைசதம் அடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.