முதல் ஒருநாள் போட்டிக்கான பிளையிங் 11 ரெடி..!! வேகத்தில் மிரட்ட உள்ள இந்திய அணி..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான பிளையிங் 11 வெளியானது, முன்னணி வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் தலைமையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி தயார் நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப சூழ்நிலையில் காரணமாக விலகி உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளார். ஒருநாள் உலக கோப்பை தொடரின் பயிற்சியாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் ஒருநாள் தொடர் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்க ஒருநாள் அணி, மும்பையில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முழு வீச்சில் செயல்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முகமது சிராஜ், முகமது ஷமி, பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய நான்கு வேகப்பந்து பவுலர்கள் உடன் களமிறங்கி உள்ளது, மற்றும் ஜடேஜா, குல்தீப் ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரிக்கு பதில் ஜோஷ் இங்கிலீஷ் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளார்,மேலும் அணியின் முன்னணி வீரர் டேவிட் வார்னர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பிளையிங் 11 : ஷுப்மான் கில், இஷான் கிஷான்(வி.கீ), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
ஆஸ்திரேலியா அணியின் பிளையிங் 11 : டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலீஷ்(வி.கீ), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.