IND VS AUS ODI 2023 : ஷமி, சிராஜ் அசத்தல் பவுலிங்…!! ஆஸ்திரேலியா அணி விரைவாக சுருண்டது ..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி அதிரடி பவுலிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை திணறடித்து பேட்டிங் ஆர்டருக்கு விரைவில் முடிவு காட்டியது.
ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ள ஒரு நாள் தொடர் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த ஒருநாள் தொடர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்நிலையில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அதே சமயத்தில் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பவுலிங்கில் திணறிய நிலையில் உடனுக்குடன் ஆட்டமிழந்து தங்கள் விக்கெட்களை இழந்தார்கள்.அதன்பின் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் 81(65) உடைய விக்கெட்டை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா கைப்பற்றினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் மிகவும் வேகமாக முடிவுக்கு வந்தது, குறிப்பாக அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்கள் கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டானிஸ் வெறும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.இந்நிலையில் 35.4 ஓவர்களில் வெறும் 188 ரன்கள் பதிவு செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இந்திய அணி சார்பில் வேகத்தில் மிரட்டிய பவுலர்கள் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் பவுலிங் மற்றும் சிறப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு உலகக்கோப்பைக்கான மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.