IND VS AUS TEST 2023 : 3வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன், பிட்ச் அறிக்கை, வெற்றி கணிப்புகள் ஒரு பார்வை..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி குறித்து முக்கிய விவரங்களை காண்போம்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி மீதம் உள்ள டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தனது நிலையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றி விடும், அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி தனது தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் என்பதால் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள்.
டெஸ்ட் போட்டி குறித்த விவரங்கள் :
போட்டி : இந்தியா VS ஆஸ்திரேலியா 3 வது டெஸ்ட் போட்டி
மைதானம் : ஹோல்கர் கிரிக்கெட் மைதானம் , இந்தோர்.
நேரம் : 9:30 (IST )
நாள் : புதன்கிழமை (டெஸ்ட் போட்டி தொடங்கும் நாள் ).
தேதி : மார்ச் 1 முதல் -மார்ச் 5 வரை
ஒளிபரப்பு தளம் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் & டிஸ்னி +
ஹாட்ஸ்டார்.
பிட்ச் அறிக்கை :
இந்த தொடரின் 3 வது டெஸ்ட் போட்டி இந்தோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது, இந்த பிட்ச் பேட்டிங் செய்ய மிகவும் உதவும் என்பதால் இரு அணிகளும் அதிரடி சிறந்த பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது, மேலும் இந்த போட்டி செம்மண் பிட்சில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் நல்ல பவுன்சாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பிட்ச் வேகப்பந்து பவுலிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது, அதே போல் இந்த பிட்சில் இடது கை ஸ்பின்னர்கள் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரு அணியின் ஸ்பின்னர்கள் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி கணிப்பு :
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2-0 என்ற நிலையில் தொடரில் முன்னிலையில் உள்ளது, எனவே 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றுவது மற்றும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணி முழுவீச்சில் 3 வது டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா அணி, இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இருப்பதால் தனது முதல் வெற்றியை பதிவு செய்து தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்பது உறுதி, ஆனால் தற்போதைய நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடைபெற்ற இந்தியா VS ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி விவரங்கள் :
மொத்த போட்டிகள் : 104
இந்திய அணி வெற்றிகள் : 32
ஆஸ்திரேலியா அணி வெற்றிகள் : 43
டிராவில் முடிந்த போட்டிகள் : 28
டை ஆனா போட்டி : 1
இந்திய அணியின் பிளேயிங் 11 (தோராயமான ) : ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எஸ் பாரத் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவி அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 (தோராயமான ) : டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (சி), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மேத்யூ ரென்ஷா, அலெக்ஸ் கேரி (வி.கீ ), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டாட் மர்பி, லான்ஸ் மோரிஸ்.