3வது ஒருநாள் போட்டி முடிவில் உலகின் நம்பர் 1 அணி யார்…?? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெல்லும் அணி உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியாக முன்னேற வாய்ப்புள்ளதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதன் பின் 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்த நிலையில், அடுத்து நடைபெற உள்ள கடைசி மற்றும் 3 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் கடைசி போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 114 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், 112 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றுவது மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒருநாள் அணியாக முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை ஒருநாள் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்த ஒரு நாள் தொடர் பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டு அணிகளும் தங்களின் திறனை நிரூபிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 வது ஒருநாள் போட்டியில் வரும் மார்ச் 22 ஆம் தேதி (நாளை) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.